Saturday 19 November 2011

புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் கொடுக்க வேண்டும் ?

செல்போன் சேவையில் நுகர்வோரின் புகார்களை கேட்டு உடனுடக்குடன் தீர்வு காண, செல்போன் கம்பெனிகளுக்கு புதிய விதிமுறைகளை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) இம்மாத இறுதியில் வெளியிடுகிறது. தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அவ்வப்போது டிராய் புதிய விதிமுறைகளை கொண்டு வருகிறது.
செல்போன் பயன்படுத்துவோரின் புகார்களில் உரிய நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் குறைகளை தீர்ப்பதற்கும் சில விதிமுறைகளை டிராய் தயாரித்தது.

இந்த வரைவு விதிமுறைகள் கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. எனினும், அவை இறுதி வடிவம் பெறாததால் இது வரை அமலுக்கு வரவில்லை. தற்போது புதிய விதிமுறைகள் தயாராகி விட்டன. அவை இம்மாத இறுதியில் வெளியிடப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்படும் என்று டிராய் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய விதிமுறைகளில் சில...

u
செல்போன் கம்பெனிகள், தங்களின் வாடிக்கையாளர்களின் புகார்களை கேட்பதற்காக தனி மையங்களை அமைக்க வேண்டும். அங்கு அந்தந்த மாநில மொழிகளில் பேசுவோர் இருக்க வேண்டும். மேலும், புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் கொடுக்க வேண்டும்.
u
வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு நம்பர் ஒதுக்கி, எப்போது குறை களையப்படும் என்ற விவரத்துடன் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.
u
பிரி&பெய்டு செல்போன்களுக்கும் எத்தனை அழைப்புகள், எவ்வளவு நேரம் பேசப்பட்டிருக்கிறது என்பதை காட்டும் பில் கொடுக்க வேண்டும்.
u
செல்போன் ஸ்கீம்களில் உள்ள நிறைகுறைகளை தெரிவிக்கவும் இலவச தொலைபேசி எண்களை அறிவிக்க வேண்டும்.
இது போன்ற பல விதிமுறைகள் வரவுள்ளன. அதன்பின், பேசாமலேயே செல்போன் பில் எகிறி விட்டால் எங்கு போய் சொல்வது என குழம்ப வேண்டியிருக்காது.