Sunday, 6 November 2011

அண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம்: தமிழ் இணையப் பதிவர்களின் ஒருங்கிணைந்த நகைச்சுவை கலந்த எதிர்ப்புக்குரல்

ஆணவ அரசி, ஊழல் ஜெயலலிதா ஆட்சியில் இனி என்னென்னவெல்லாம் நடக்கலாம்: ஒரு கற்பனை:

 • சென்ற ஆட்சியில் கட்டப்பட்ட அம்பானியின் வீடு மாட்டு தொழுவம் ஆக்கப்படும் #ஓ.ப:அம்மாஆஆ அது தமிழ்நாட்டில் இல்லை/சோ வாட்??
 • விஜய் மவனுக்கு காலு கிலோ கறுப்பு புளி ஆணைய தலைவர் பதவி வழங்கப்படும்!
 • இந்த தமிழக முதல் அமைச்சர் பதவி கலைஞர் வகித்தது எனவே வேண்டாம் அப்பதவி என்று ஜெயலலிதா கூறுவாராராரா.......! #டவுட்டு
 • கலைஞர் தலைமையில் எஞ்சினியர்கள் கட்டிய கட்டிடங்களை மாற்றும் ஜெயலலிதா,கலைஞர் தலைமையில் எம்.நடராசன் கட்டிய சசிகலாவை ஏன் "மாற்ற" மாட்டேன்கிறார்.
 • சொத்துகுவிப்பு வழக்கில் உள்ள தங்கநகைகள் தனது முப்பாட்டனார் போதிதர்மர் தந்தது எனலாம்
 • ஹோட்டல்களில் இனி தோசை,இட்லிக்கு தொட்டுக்கொள்ள கொத்தமல்லி,பொதினா சட்னிகள் மட்டுமே தரப்படும் #பச்சைகலர்
 • விஜயகாந்திற்கு 'கேப்டன்' அடைமொழி பிடுங்கப்பட்டு '12th மேன்' பட்டம் தரப்படலாம்.!
 • கிண்டி இரயில் நிலையம், தாம்பரம் பேருந்து நிலையமாக மாற்றம்!
 • கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து குணமானவர்களுக்கு ஆப்ரேஷன் ரெட் வைரஸ் செலுத்தப்படும்.
 • இந்தியாவின் மிகப்பெரிய நூலகத்தில் பேசுவதில் பெருமையடைகிறேன்- ஹிலாரி கிளிண்டன், 20.07.2011 #கழுதைக்கு தெரியுமா? கற்பூர வாசம்!
 • நல்ல வேளை கலைஞர் ஏற்கனவே தன் கோபாலபுரம் வீட்ட hosptial-னு அறிவிச்சுட்டார்... இல்லேன்னா அதையும் கவர்மெண்டே பண்ணிருக்கும்.
 • இனிமேல் காலையில் சந்திரன் உதிக்கவும் ,இரவில் 'சூரியன்' வெளிவரவும் அம்மா இடம் மாற்றி உத்தரவு !
 • பெரியார் சமத்துவபுரமும் அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள், பிரம்மதேயங்களாக மாற்றப்படும்
 • அண்ணா அறிவாலயம் பல் ஆஸ்பத்திரியாக மாற்றப்படும் ஜெ
 • ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் திறந்தவெளி புல்வெளி லாட்ஜாக மாற்றப்படும்!
 • மக்கள் நலன் கருதி டைடல் பார்க் டாஸ்மாக் தலைமையகமாக மாற்றப்படுகிறது-ஜெ.
 • கலைஞர் ஆட்சியில் போட்ட முட்டையெல்லாம் கோழிகளுக்கே திருப்பி அளிக்கப்படும்
 • அப்படியே அந்த நூலகத்தில் பணிபுரிந்த நூலகர், மருத்துவராக பணிமாற்றம் செய்யப்பட்டார்!!
 • இனி அனைவரும் அப்பாடக்கர் என்ற வார்தையை 'அம்மா'டக்கர் என்று தான் சொல்ல வேண்டும்.!..
 • தினமலர் நாளிதழ் ரேசன் கார்டுக்கு ஒண்று இலவசமாக தினமும் உங்கள் இல்லம் தேடி வரும்.
 • யாருக்குத் தெரியும் தலைமை செயலகம் திருவரங்கத்துக்கு மாறுனாலும் மாறும்.
 • இவ்வளவு ஏன் 'தமிழ்'நாடே 'ஜெயநாடு' என இந்த கணம் முதல் செயல்படும்!
 • அம்மா நூலகத்தை மூடுவதைக்கூட தாங்கிக்களாம் ஆனா ஜெய டிவில இந்த பொது ஜனங்கள் நன்றி சொல்வாய்ங்க பாருங்க அதைத்தான்.
 • கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை சுனாமியை உருவாக்கும் என்று அஞ்சப்படுவதால் அது இடித்துத் தரை மட்டம் ஆக்கப்படும்.
 • அதிமுக கொடியில் 'அண்ணா'வுக்கு பதில் 'அம்மா' இடம்பிடிப்பார்!
 • சும்மாவே அந்தம்மா ஆடும் இவனுக வேற உள்ளாட்சி தேர்தல்ல பத்து மேயர் பதவிக்கும் சலங்கை கட்டி விட்டுட்டானுங்க.
 • பெரம்பூர் பாலத்தை 5 ஆண்டுகளுக்கு முடக்கியதை போல, கடந்த ஆட்சியில் துவக்கப்பட்டு நடைபெறும் 94 பால பணிகளும் முடக்கப்படும்!
 • அம்மாவுக்கென்றே தனியாக துதிபாடும் அமைச்சர் உருவாக்க படும்!
 • மின் துறை, பத்திரப்பதிவு, வருவாய் துறைகளில் ஊழலை ஒழிப்பதற்காக திமுக கொண்டுவந்த மின்னாளுமை திட்டம் ரத்து!
 • சமூகத்தில் ஏற்றம் பெறுவதற்காக அருந்ததியருக்கு திமுகவால் கொடுக்கப்பட்ட உள் ஒதுக்கீடு ரத்து!
 • இனி எல்லா மரங்களிலும் இரண்டு இலை மட்டுமே இருக்க வேண்டும்.
 • நல்ல வேளை, காமராஜர் செத்துட்டாரு. இல்லைன்னா அணைகள் எல்லாம் மகாமக குளங்கள் ஆயிருக்கும்!
 • அனைத்து அரசு பார்களிலும் சரக்குக்கு பதில் பச்ச தண்ணீர் வழங்கப்படலாம்!
 • இனிமே கொ***னு திட்டகூடாது அம்மாளனுதான் திட்டனும்!
 • தோழிகள் இருப்பவர்களுக்கு இலவச ரைஸ் கூக்கர்!
 • தமிழ் அகராதியில் 'தோழி' என்ற வார்த்தைக்கு பதில் 'சசிகலா' என்று மாற்றப்படும்!!..
 • தாலிக்கயிறு இனிமேல் பச்சைக்கலர்ல தான் கட்டனும்!
 • ஐட்டம் சாங்கில் நடிகைகள் பச்ச புடவை மட்டுமே கட்டி ஆட அனுமதிக்கபடுவார்கள்!
 • அவதார் படத்த மறுபடியும் நடிகர்கள் பச்சை கலர் பூசி நடிக்க வெச்சி படம் எடுக்கணும
 • பச்சை நிறமே பச்சை நிறமே பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாகப் பாடவேண்டும
 • சோறு துன்னுட்டு வரேன்! லேட்டாச்சுன்னா ஹோட்டல அம்மா கக்கூஸா மாத்தி ஆர்டர் போட்டாலும் போட்டுரும்!
 • செம்மொழி பூங்கா, உலகத்தரம் வாய்ந்த நவீன குப்பை சேகரிக்கும் இடமாக மாற்றலாம்!
 • வாலி,வைரமுத்து,பா.விஜய் கடா சட்டத்தில் கைது!
 • யாருக்கு தெரியும் பெங்களுரு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதியாக O.பன்னீர்செல்வம் நியமிக்க படலாம்!
 • பெங்களுர் ஜட்ஜ் என் கைய புடிச்சி இழுத்தாரு!!
 • காலில் விழும் துறை அமைச்சர் நியமனம்!
 • யாருக்கு தெரியும், பெங்களூரும் பெங்களூரு நீதிமன்றமும் தமிழக எல்லைக்குள் வரலாம்!
 • எல்லா தழிழக அரசு வண்ணதொலைக்காட்சி ஸ்கீரினிலும் பச்சை பெயின்ட் அடிக்கப்படும்!
 • தமிழில் இனி ஜ ஜா ஜி ஜீ வரிசை புதிதாக சேர்க்கப்படும்!
 • தமிழ்நாட்டின் பெயரையே கொடநாடு என்று மாற்றலாம்!
 • அம்மாவின் காலைத் தவிர வேறு யார் காலிலும் விழுந்து ஆசி வாங்கக் கூடாது!
 • நூலகத்திலிருக்கும் புத்தகங்களை பஜ்ஜி போண்டா கடைகளுக்கு இலவசமா வழங்கப்படும்!
 • போன ஆட்சியில் பிறந்த குழந்தைகளை அண்ணா நூலகத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக கள்ளிப்பால் ஊத்தப்படும்!
 • இனிமேல் சிவப்பு விளக்கு ஏரியா என்பதும் பச்சை விளக்கு ஏரியா எனப் பெயர் மாற்றப்படும்!!
 • சிக்னலில் இனி 'சிகப்பும்' "மஞ்சளும்" கெடையாது. எல்லாமே பச்சை தான்!
 • அதிமுக-விலேயே 'முக' இருக்கிறதே, அம்மா என்ன செய்வார் இதை?
 • அ.தி.மு.க வினர் யார்மேல் வழக்கு இருந்தாலும் அவரவர்களின் வீட்டிற்கே வந்து நீதிபதிகள் விசாரிக்கவேண்டும்!
 • தினமலர் அரசு பத்திரிக்கை என அறிவிக்கப்படும்!
 • செயலலிதாவிற்கு இடித்து மாற்றும் ஆலோசனை சொல்லும் வாசுது நிபுனர் யாரோ...?
 • இன்னும் செம்மொழி பூங்கா இருக்கு. அப்போலோவுக்கு வித்தா துட்டாவது தேறும்!