Friday 25 November 2011

முகத்திற்கு அழகு தரும் பொட்டு


நெற்றியில் பொட்டிட்ட பிறகு கன்னத்திலோ, முகவாய் பகுதியிலோ ஒரு சிறு சந்துப்புள்ளி வைப்பது நம் நாட்டு வழக்கம். இது, முக அழகுக்கு மேலும் மெருகூட்டும். இதை, திருஷ்டி பொட்டு என்றும் சொல்வர்.
குங்குமத்தை சாதாரணமாக நெற்றியிலிட்டுக் கொள்வதை விட, கொஞ்சம் வெள்ளை வாசலைன் முதலில் இட்டு, அதன் மீது குங்குமத்தை பொட்டிட்டால், பொட்டு நீண்ட நேரம் அழியாமல், புத்தம் புதிதாக இட்டது போலக் காட்சி தரும். நெற்றியில் ஏதாவது வண்ண சாந்து அல்லது குங்குமத்தால் பொட்டு இட்ட பிறகு, அதைச் சுற்றி வேறு வண்ணத்தில் ஒரு கோடு தீட்டிக் கொண்டால், திலகம் எடுப்பாக இருப்பதோடு, அழகாகவும் தோற்றமளிக்கும். இந்நாளில் பிளாஸ்டிக் ஷீட்களை வட்ட வடிவில் பொட்டுகளாக கத்தரித்து விற்பனை செய்கின்றனர். மற்றும் கவர்ச்சிகரமான வண்ணங்களில் பொட்டுகளை அச்சடித்தும் விற்கின்றனர். அவற்றை வாங்கி நெற்றியில் ஒட்டிக் கொண்டு விடலாம். பொட்டிடும் சிரமம் குறையும். நெற்றியில் பொட்டிடும் போது, நுணுக்கமான வேலைப்பாடு இருக்கத் தேவையில்லை. பளிச்சென பார்த்த மாத்திரத்திலேயே கண்களைக் கவரும் வண்ண அமைப்புடன் இருந்தால் போதும்.
சாந்தை உபயோகித்து பொட்டிடும் போது, பொட்டிட்ட பிறகு முகப்பவுடர் பூசிக் கொள்வது, முகத்தைப் பளிச்சென தோற்றுவிக்கும். ஆனால், குங்குமம் உபயோகிக்கும் போது, முதலில் பவுடர் பூசி விடுவது தவிர்க்க இயலாதது. எனினும், பொட்டிட்ட பிறகு, மிக எச்சரிக்கையுடன் முகத்தில் மற்றுமொரு தடவை பவுடரை லேசாக ஒற்றிக் கொள்ளலாம்.
நெற்றி விசாலமாக அமையப் பெற்ற பெண்கள், பெரிய பொட்டாக வைத்துக் கொண்டால்தான் பாந்தமாக இருக்கும். குறுகிய நெற்றியை பெற்றவர்களோ, சிறிய அளவிலேயே பொட்டிட்டு கொள்வதுதான் அழகாக இருக்கும். அகன்ற நெற்றியுடைய பெண்கள் மேல் நோக்கி, நீண்ட வாக்கில் கோடாக இழுத்துக் கொள்வது அழகூட்டுவதாக அமையும்.
நெற்றியில் பொட்டிட்ட பிறகு கன்னத்திலோ, முகவாய் பகுதியிலோ ஒரு சிறு சந்துப்புள்ளி வைப்பது நம் நாட்டு வழக்கம். இது, முக அழகுக்கு மேலும் மெருகூட்டும். இதை, திருஷ்டி பொட்டு என்றும் சொல்வர். மிகவும் சிவந்த நிறமுடைய பெண்கள், கரு நிறச் சாந்தால் பொட்டு இட்டால், மிகவும் அழகாக இருக்கும். கருநிறச் சாந்து பொட்டிட்டுக் கொண்டால், எந்த மாதிரி வண்ண உடை அணிந்தாலும், பொருத்தமாகவே இருக்கும். இவர்கள் குங்குமம் இட்டுக் கொள்வதாக இருந்தால், ஆழ்ந்த நிறமாக பார்த்து இட்டுக் கொள்ள வேண்டும்.
டிப்ஸ்: ஸ்டிக்கர் பொட்டு வைத்தபடியே தூங்கி விடாதீர்கள்; அந்த இடமே அலர்ஜி ஆகிவிடும்.
*பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றால் அப்படியே முகத்தை துடைக்கக் கூடாது; நனைத்துதான் துடைக்க வேண்டும்.
* கை, கால் நகங்களை, “வி’ வடிவத்தில் வெட்டாதீர்கள்; உடைந்து விடும். ரொம்பவும் ஒட்ட, ஒட்ட வெட்டவும் கூடாது. கீழே சதை நோக்கி வளர ஆரம்பித்து விடும்.
* நகத்தால் வெறுமனே முகத்தின் கரும்புள்ளிகளை நீக்க முயலக் கூடாது. நகத்தைச் சுற்றி டிஷ்யூ பேப்பரை அல்லது மெல்லிய துணியை விரலில் சுற்றிக் கொண்டு தான் நீக்க வேண்டும்.
* பழுத்த பருவையும், வெறும் விரல்களால் அழுத்தக் கூடாது. பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பரை விரலில் சுற்றிக் கொள்ள வேண்டும்.
* வெறும் காலுடன் சகதியில் அல்லது ஈரத் துணியில் அதிக நேரம் இருக்கக் கூடாது. சேற்றுப்புண் மாதிரி நோய் தொற்று ஏற்படும். பாத வெடிப்பின் வழியாகவும் கிருமிகள் உடம்பினுள் செல்லும்.
* வறண்ட தோல் உடையவர்கள் அடிக்கடி சோப்பு போட்டு, முகம் கழுவக் கூடாது. பால் அல்லது தயிர் தடவியோ அல்லது பேஷ் வாஷ் உபயோகித்தோ முகம் கழுவலாம்.
* முகத்துக்கு மேக்-அப் போடும் போதும், பேஸ்பேக் போடும் போதும் கழுத்தை கவனிக்காமல் விடக் கூடாது. முகமும், கழுத்தும் தனித்தனியான கலர்களில் தெரியும்.
* ஒவ்வொரு முறை நகரத்துக்கு பாலிஷ் போடும் போதும், இடையே ஒரு நாள், நகம் சுவாசிக்க ஓய்வு தரவேண்டும். இல்லையெனில், நகம் மஞ்சள் கலராகிவிடும்.