பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பெட்ரோலிய பொருட்களை தயாரிக்க இந்திய விஞ்ஞானிகள் கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர். டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலியம் இன்ஸ்டிடியூட் இயக்குனர் மதுக்கர் ஓம்காரநாத் கார்க் தலைமையில் விஞ்ஞானிகள் குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது.
பிளாஸ்டிக்கை ரசாயன ஊக்கிகள் மூலம் பெட்ரோல், காஸ் என மாற்ற முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீணாகும் பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் மற்றும் காஸ் அல்லது டீசல் மற்றும் காஸ் என தயாரிக்கலாம்.
இந்த தயாரிப்பு பணி, சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். இதுபற்றி ஆய்வு குழுவில் இடம் பெற்ற விஞ்ஞானி எஸ்.கே. சர்மா கூறுகையில் ‘நமது விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு மிகப் பெரிய சாதனை’ என்றார். இந்த திட்டத்துக்கு இந்திய இயற்கை எரிவாயு கழகம்(கெயில்) உதவ உள்ளது.

எவ்வளவு கிடைக்கும்
உலகம் முழுவதும் இப்போது ஆண்டுக்கு 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இது ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரிக்கிறது. பிளாஸ்டிக்கில் உள்ள பாலியோலெபினிக், பாலி எத்திலீன் ஆகியவற்றின் மூலம் பெட்ரோல், டீசல், காஸ் தயாரிக்கப்படும். ஒரு கிலோ மூலப்பொருளில் 700 மி.லி. பெட்ரோல் மற்றும் காஸ் தயாரிக்க முடியும். அல்லது 850 மி.லி. டீசல் மற்றும் காஸ் தயாரிக்க முடியும்.