இறுதிச்சடங்கு செய்வது, இறந்தவர் உடல்களை அடக்கம், தகனம் செய்வது ஆகிய சடங்குகள் நாட்டுக்கு நாடு, பகுதிக்கு பகுதி வேறு படுகிறது. மிகமிக வித்தியாசமான கலாசாரம் தென்கொரியாவில் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு: 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சீன தத்துவ ஞானி கன்பூசியஸ். இவ ர் வகுத்த நெறிமுறைகளே தென்கொரியாவில் பெரும்பாலும் எல்லா மத சடங்குகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இறந்தவர் களின் உடலை நல்லடக்கம் செய்து ஆண்டுதோறும் அஞ்சலி செலு த்த வேண்டும் என்பது அவர் வகுத்த நெறி. அதுவே தென் கொரி யாவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டு களாக நூதன கலாசாரம் பரவி வருகிறது.
இறுதி சடங்குகள் முடிந்த பிறகு, உடலை தகனம் செய்கின்றனர். கடைசியாக கிடைத்த சாம்பல் பின்னர் ஒரு கன்டெய்னரில் சேகரிக் கப்பட்டு அதிக வெப்பநிலையில் வைக்கப்படுகிறது. அதிக வெப்ப நிலையில் நீண்ட நேரம் வைக்கப்படுவதால், சாம்பல் துகள்கள் உருகி, இறுகி சிறு சிறு உருண்டைகளாக மாறுகின்றன. கிரிஸ்டல் மணி போல வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த உருண்டைக ளை புத்தர் பொம்மையுடன் கூடிய கண்ணாடி குப்பியில் வைத்து மூடி விடுகின்றனர். இச்சியான் நகரை சேர்ந்த போன்யாங் என்ற நிறுவனம் இந்த பணியை செய்து தருகிறது. இதற்கு செலவு சுமார் ரூ.43 ஆயிரம். ஒருவரது உடல் சாம்பலில் இருந்து 4 அல்லது 5 கப் கிரிஸ்டல் மணிகள் உருவாகின்றன.
இதுபற்றி கிம் நாம் என்பவர் கூறுகையில், ‘‘அப்பா 27 ஆண்டுகளு க்கு முன்பு இறந்துவிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது உட லை தோண்டி எடுத்து, எரித்து சாம்பலாக்கி கிரிஸ்டல் ஆக்கி வைத் திருக்கிறேன். வழிபாட்டு அறையில், மணி வடிவில் இருக்கும் தந்தையை கும்பிட்டுவிட்டுதான் தினமும் வேலையை தொடங்கு கிறேன். இப்போதும் அவர் வீட்டிலேயே இருப்பது போல உணர்கி றேன்’’ என்றார்.
நாட்டில் இட பற்றாக்குறை இருப்பதால் தென்கொரிய அரசும் இத் திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. ‘கல்லறைகளுக்கு 60 ஆண்டு கள் மட்டுமே அனுமதி. நல்லடக்கம் செய்து 60 ஆண்டுக்கு பிறகு அந்த இடத்தை காலி செய்து கொடுத்துவிட வேண்டும்’ என்று 2000 -ல் அரசு உத்தரவு போட்டது. அரசே பிரசாரம் செய்வதால், பலரும் முன்னோர்களை ‘கிரிஸ்டல்’ ஆக்கும் கலாசாரத்துக்கு மாறி வருகி ன்றனர்.