வாரியத்துக்கு ஏற்பட்டுள்ள ரூ.8 ஆயிரம் கோடி இழப்பை சரி செய்ய, மின் கட்டணத்தை 40 சதவீதம் வரை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையத்திடம் அறிக்கையை அளித்துள்ளது.
பஸ் கட்டணமும், பால் விலை உயர்வும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன. மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. எனவே, மின்சார வாரியமே ஆய்வு செய்து மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு கோரிக் கை வைத்து, அந்த ஆணை யம் மக்களின் கருத்தை கேட்டறிந்து மின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் 10,000 மெகா வாட் மின்சாரத்தை மொத்தம் 2.10 கோடி பேருக்கு பகிர்ந்து அளிக்கிறது. இதில் 1.56 லட்சம் வீட்டு மின்இணைப்பு, 19 லட்சம் விவசாயத்திற்கு இலவச இணைப்பு, 14 லட்சம் இணைப்புகள் குடிசைகளுக்கு வழங்கப்படுகிறது. மீதம் உள்ளவை வர்த்தக நிறுவனங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
கடந்த 2010ம் ஆண்டில் மின்கட்டணத்தின் இழப்பை ஈடுசெய் யும் வகையில் 600 மெகாவாட்டுக் கும் அதிகமாக பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்று ரூ.1.05 கட்டணம் உயர்த்தப்பட்டது.
அதாவது ரூ.3 இருந்த கட்டணம் ரூ.4.05 என நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு மூலம் ஆண்டுக்கு ரூ.1,952 கோடி கூடுதல் வருமானம் கிடைத்தது. வீட்டு உபயோக கட்டணங்கள் உயர்த்தவில்லை. 2001ல் மின்வாரியத்தின் கடன் தொகை ரூ.3539 கோடி, 2011ல் கடன் தொகை ரூ.43,000 கோடியாக உள்ளது. மேலும் 2011&12 ஆண்டுகளில் கடன் தொகை கூடுதலாக ரூ.10,000 கோடி ஏற்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இழப்பு ரூ.8000 கோடி: இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ÔÔமின்வாரியத்தில் உள்ள குழுவினர் கட்டண நிர்ணய அறிக்கையை தயார் செய்துள்ளனர். இது மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனுவாக கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது மின்வாரித்தின் மொத்த செலவு ஸீ28 ஆயிரம் கோடியாக உள்ளது. இதில் பல்வேறு கட்டணம் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. ரூ.8 ஆயிரம் கோடி நஷ்டத்தில் வாரியம் இயங்குகிறது. இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய, கட்டணத்தை உயர்த்தவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்அடிப்படையில் சராசரியாக 40 சதவீதம் கட்டணம் உயர்த்த கேட்டு கொண்டுள்ளோம். இந்த அறிக்கையை வைத்து கட்டணம் நிர்ணயம் பற்றி, ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்யும்ÕÕ என்றார்.
இழப்பு கட்டண உயர்வு மூலம் சரியாகாது: தமிழ்நாட்டில் ஏறத்தாழ 7 தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதன்மூலம் 1180 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த தேவையில் 9 சதவீதமே. ஆனால், இந்த மின்உற்பத்திக்கு மொத்தமுள்ள வருமானத்தில் 35 சதவீதத்தை இதற்கு செலவிடப்படுகிறது. எனவே மின்சாரம் தனியாரிடம் வாங்கும்போது, அதிகமாக இழப்பு ஏற்படுகிறது. முதலில் அரசு மின்திட்டங் களை அதிகமாக செயல்படுத்தி, அதன் மூலம் தன்னிறைவை பெற வேண்டும். தனியார் மின்உற்பத்தி நிலையங்களை தேசியமயமாக்க வேண்டும் என ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உயர்வு எப்போது?
‘கட்டண உயர்வு தொடர்பான அறிக்கை மீது மக்களின் கருத்தை இணையதளம் மூலமும், நேரிலும் ஒழுங்குமுறை ஆணையம் கேட்கும். சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கியமான இடங்களிலும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். அறிக்கை சமர்ப்பித்த 120 நாட்களில் இறுதி உத்தரவை மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் ஒழுங்குமுறை ஆணையம் வழங்கும்ÕÕ என மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய மின்கட்டணம்
வீடுகளுக்கு:
1 முதல் 50 யூனிட் வரை 65 காசு
51 முதல் 100 யூனிட் வரை 75 காசு
101 முதல் 200 யூனிட் வரை ரூ.1.50
201 முதல் 600 யூனிட் வரை ரூ.2.20
601 யூனிட்க்கு மேல் ரூ.4.05
வர்த்தக நிறுவனங்களுக்கு:
1 முதல் 100 யூனிட் வரை ரூ.4.30
100 முதல் 200 யூனிட் வரை ரூ.5.30
200 யூனிட்க்கு மேல் ரூ.6.50