Friday, 11 November 2011

குழந்தைகளுக்கு T.V. வேண்டாமே! – அராய்ச்சி தகவல்

Child-Watching-TV
Child-Watching-TV
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை T.V. அல்லது வீடியோ படம் பார்க்க அனுமதிக்க வேண்டாம். அது அவர்களின் இயல்பான வளர்ச்சியை பாதிக்கும் என்கிறார்கள், அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவர்கள்.
இது தொடர்பான எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ அகாடமி. பெற்றோர் தமது குழந்தைகளை T.V. அல்லது பிற காட்சிகளைப் பார்ப்பதற்கு அனுமதிப்பதிற்கு பதிலாக, அவர்களுடன் பேச வேண்டும், அவர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளை விட இரண்டு மணிநேரம் மேல் டிவி பார்க்கும் குழந்தைகளுக்கு (ஐந்து வயதுக்குட்பட்ட), ஆஸ்த்மா வர இரண்டு மடங்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு.www.kalvikalanjiam.com
குழந்தைகள் T.V. பார்ப்பது மட்டுமல்ல, பெற்றோரின் T.V. பழக்கமும் குழந்தைகள் பேசக் கற்றுக் கொள்வதைத் தாமதப்படுதுமாம். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் T.V. பார்ப்பதால் நன்மை ஏதும் தெரியவில்லை. மாறாக தீமைகளே அதிகம் என்கிறது ஆய்வறிக்கை.
இந்த ஆய்வறிக்கையில் குழந்தைகள் வீடியோ கேம்ஸ் விளையாடுவது, ஸ்மார்ட்போன்கள் மற்ற மின்னணு சாதனங்களைப் பயன்ப்படுதுவது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் எந்தப் பங்கேற்பும் எல்லாம் ‘தேமே’ என்று ‘ஸ்க்ரீனை’ பார்ப்பது எதிர்மறை தாக்கத்தை ஏற்ப்படுதுமாம். அது செல்போன், கம்ப்யூட்டர், T.V. என்று எந்த ‘ஸ்க்ரீனாக’ இருந்தாலும் சரி.
பெற்றோர்களே! இந்த செய்தி உங்களுக்கு தான். உங்கள் பிள்ளை அடிக்கடி தொந்தரவு கொடுப்பதை தவிர்க்க T.V. யில் வரும் பல (குழைந்தைகளை ஈர்க்கும் தொலைக்காட்சி – உதாரணமாக சுட்டி T.V. , POGO, கார்ட்டூன் நெட்வொர்க்) நிகழ்ச்சிகள் காட்டி தொல்லைகளில் இருந்து தப்பித்து விடலாம் என்று எண்ணி உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை குலைத்து விடாதீர்கள். சிந்தித்து செயல்படுங்கள்!!