நீங்கள் உங்கள் கணணியை பிறருடன் பகிரும் சந்தர்ப்பங்களில் முக்கியமான கோப்புறைகள் (Folders) மற்றும் கோப்புகளை(Files) மறைத்து வைக்க விரும்புவீர்கள். இவற்றை தனித்தனியே மறைத்து வைப்பதை விட ஒரு முழு டிரைவில் மறைத்து
வைப்பது எளிது. டிரைவை மறைத்து வைப்பதற்கு பல வழிகள் இருந்தாலும் இப்பதிவில் சற்று எளிமையான வழிமுறையை பற்றி பார்ப்போம்.
வழிமுறைகள் :
- windows key + R ஐ என்டர் செய்வதன் மூலம் Run விண்டோவை திறந்து "gpedit.msc" என டைப் செய்து group policy editor ஐ திறக்கவும்.
- group policy editor ஐ திறந்ததும் User Configuration > Administrative Templates > Windows Components ஊடாக சென்று Windows Explorer ஐ கிளிக் செய்யவும்.
- இப்போது வலது பக்க திரையில் "Hide these specific drives in my computer" என்ற வரிசையை கண்டுபிடித்து அதனை இரண்டு தடவை கிளிக் செய்வதன் மூலம் அதன் Properties ஐ திறவுங்கள்.
Properties இல் "enabled " என்பதை தெரிவு செய்த பின்னர் "Restrict All Drives" என்பதை கிளிக் செய்வதினூடாக நீங்கள் மறைக்க வேண்டிய டிரைவை தெரிவு செய்யுங்கள். உதாரணமாக drive D ஐ மறைப்பதாக இருந்தால் "Restrict D drive only" என்பதை தெரிவு செய்யுங்கள். இப்போது ok ஐ கிளிக் செய்த பின் group policy editor லிருந்து வெளியேறுங்கள்.
அவ்வளவுதான். இப்போது My Computer ஐ திறந்து டிரைவ் மறைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.
|