"ஒருமுறை காதல்" 5
உன்னைக் காதலித்த
காலங்களோ! வாரங்கள்
மாதங்களாகின மாதங்கள்
வருடங்களாகின முடிவெனும்
ஒன்றையே மகிழ்வோடு எதிர்பார்த்தேன்
நீயோ முடியாது என்றுவிட்டாய்
பின்னேதான் தெரிந்தது
நீ காதலிக்கவில்லை
காதலித்தது போல் நாடகம்
செய்கிறாய் என்று
கனவாம் கற்பனையாம்
பலகோடி நினைத்தவையும்
மாயமாய் மறைந்து விட்டன -அன்பே
உன்னைக் காதலித்த எனக்காக
நீ தந்த பரிசு இது என்று
எப்போது புரிந்து கொள்வாய்
எனது புனித காதலை
காலங்கள் கடந்தாலும்
நேரங்கள் நகர்ந்து கொண்டே சென்றாலும்
உன் நினைவுகள் என்றும்
என் மனதில் அழியாச் சின்னங்களே..........