நாங்கள் கோட்டை கட்டி கொத்தளம் அமைத்து ஆட்சி புரிகையில் அவன் அமேசன் காடுகளில் காட்டுவாசியாய் அலைந்து கொண்டு இருந்தான் இன்று அவன் நிலவுக்கு கலம் அனுப்பி களம் அமைத்து ஆடுகிறான் நாடுகளை ஆட்டுவிக்கிறான் ஆனால் நாங்கள்????? இன்னும் பழைய பஞ்சாங்கத்துடன் பாட்டி நிலவில் வடை சுட்ட கதையையே எம் பிஞ்சுகளுக்கு பாலுடன் கலந்து ஊட்டுகின்றோம் காலம் மாறி கன காலம் ஆகி விட்டதே நீங்கள் மாறமாட்டீர்களா?? வருங்கால சந்ததிக்காவது எம் வரலாற்றை பாலுடன் கலந்து ஊட்டுங்கள் தாய்க்குலமே சங்க காலத்தின் ஒரு பகுதியாவது கண் முன் வரட்டுமே இனத்தில் கொஞ்சமும் மொழியில் மிச்சமும் மிஞ்சிப்போகட்டும்