தோழி ஒருவரை பழிவாங்க, அவரை நிர்வாணமாக படம் பிடித்து மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர் அவரது 4 தோழிகள்.
ஹரியானா மாநிலம், பஞ்சகுலா மாவட்டத்தில் ஒரு பெண்கள் விடுதி உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த விடுதியில் ஒரு அறையில் 2 முதல் 4 பெண்கள் தங்கி உள்ளனர்.
கடந்த மாதம் இங்கு தங்கியிருந்த சில பெண்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி, ஒருதரப்பை சேர்ந்த 4 பெண்கள் மற்றொரு தரப்பை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடத்தி சென்றனர்.
காரில் காட்டு பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து அவரை அடித்து உதைத்தனர். முடிவாக அப்பெண்ணின் ஆடைகளை களைய செய்து, அவரது மொபைல் போனில் படம் பிடித்தனர். பல செக்ஸ் சில்மிஷங்களை செய்து கொடுமைப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தை எம்.எம்.எஸ். மெசேஜாக மாற்றினர்.
நிர்வாணமாக்கப்பட்ட அந்த பெண்ணின் மொபைல் போனில் இருந்த சேமிக்கப்பட்ட மற்ற எண்களுக்கு அந்த வீடியோவை, எம்.எம்.எஸ்சாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்த போலீசாரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் வழக்கு பதிய கூட இல்லை.
பலருக்கு அனுப்பப்பட்ட இந்த வீடியோ தற்போது ஹரியானா மாநிலம் முழுவதும் பரவி உள்ளது. இந்த சம்பவத்தினால் பெரும் அவமானம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது தேசிய பெண்கள் அமைப்புகளின் உதவியை நாடியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு தேசிய பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை குறித்து வழக்கு தொடுத்துள்ள வழக்கறிஞர் பங்கச் சாண்கோதீயா என்பவர் கூறியதாவது, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதியாமல் விட்டுள்ளனர்.
ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி படம் எடுத்து, மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் சைபர் கிரைம் குற்றமாகும். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருங்காலங்களில் இதுபோன்ற சைபர் குற்றங்கள் அதிகரிக்கும், என்றார்.