Wednesday 26 October 2011

சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: அறிந்து கொள்ளுங்கள்!

சூதாட்ட விளையாட்டுகளில் முன்னணியில் இருப்பது. சீட்டு, விளையாட்டு. பழமையான சூதாட்டங்களில் இதுவும் ஒன்று. கி.பி.1300களில் எகிப்தில் இருந்து இங்கிலாந்துக்கு வந்தவைதான் தற்போதைய சீட்டுக்கட்டுகள்.  சீட்டுக்கட்டுகளில் நான்கு ராஜாக்கள் இருப்பார்கள். இதில் ஸ்பேட் ராஜா என்பது டேவிட்டை குறிக்கும், ஹார்ட் ராஜா, சார்லசை குறிக்கும், டயமண்ட் ராஜா, ஜூலியஸ் சீசரை குறிக்கும், கிளவர்  ராஜா, அலெக்சாண்டரை குறிக்கும். 18-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சீட்டு விளையாட்டில் ராஜாவுக்கே அதிகமாக மதிப்பு இருந்தது. பிரெஞ்சு புரட்சிக்குப்பிறகு ராஜாவைவிட அடித்தட்டு மக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமென்ற சிந்தனை அதிகமானது. அதன் விளைவாக ராஜாவை விட ஏஸ்என்று கூறப்படுகிற ‘ஏ’ என்ற ஆங்கில எழுத்துக்கு அதிக மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சீட்டுக் கட்டில் உள்ள கறுப்பு, சிவப்பு படங்கள் இரவையும், பகலையும் குறிக்கும். இதில் ஜோக்கரை கொண்டு வந்து நுழைத்தவர்கள் அமெரிக்கர்கள். 1870-ல் இது நடந்தது. 18,19 -ம் நூற்றாண்டுகளில் சீட்டுக்கட்டுகளின் பின்புறம் விளம்பரம் செய்வது பெரிய வியாபார தந்திரமாக இருந்துள்ளது.  ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான கேரிபேக்கர், தனது சொத்து முழுவதையும் சீட்டாட்டம் மூலமே சம்பாதித்தார். 1990-ல் லண்டனில் இருக்கும் மிகப்பெரிய கேசினோ ஒன்றில் நுழைந்தார். கேரிபேக்கர். 15 மில்லியன் பவுண்டுகளை பந்தயம் கட்டி விளையாடினார். ஒரே நேரத்தில் 4 மேஜைகளில் ஒற்றை ஆளாக கேரிபேக்கர் விளையாடி தோற்றுபோனார். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், சிரித்துக்கொண்டே வெளியேறினார். அவரது நடவடிக்கையைப் பார்த்த சூதாட்ட கிளப் அதிர்ச்சியில் உறைந்தது. ஏனென்றால் அன்று அவர் இழந்த பணம் இந்திய கணக்கிற்கு 105 கோடி ரூபாய் ஆகும்.

இதே போல் லாஸ்வேகாசில் உள்ள எம்.ஜி.எம். என்ற கேசினோவுக்கு கேரிபேக்கர் போயிருந்தார். விளையாடத் தொடங்கினார். வெற்றி மீது வெற்றி வந்து சேர தனக்கு மது ஊற்றிக்கொடுத்த ஒரு பெண்ணிற்கு மாளிகை வீட்டை பரிசாக கொடுத்தார். கதவை திறந்து விட்டவருக்கு அவர் கொடுத்த டிப்ஸ், 5 கோடி ரூபாய்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு லண்டனில் 3 வாரங்கள் சூதாடினார். இந்த முறை அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. தோல்விமேல் தோல்வி. 28 மில்லியன் டாலர் நஷ்டம். தனிநபர் ஒருவர் சூதாட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையை இழந்தது உலக அளவில் அதிசயமானது. 2004ல் அவர் இறந்தபோது அவரது சொத்து மதிப்பு 5.4 மில்லியன் டாலர். தோற்றாலும் ஜெயித்தாலும் நிலைதடுமாறாத கேரிபேக்கர், சூட்ட உலகில் ஒரு மன்னராகவே வலம் வந்தார்.