படித்து முடித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருந்தாலும் அதற்கான முயற்சிகளை திட்டமிட்டு மேற்கொள்ளாத காரணத்தால் வேலை கிடைக்காமல், அல்லது விரும்பிய துறையில் வேலை கிடைக்காமல் போகிறது. கீழ்க்காணும் 8 வழிகளை நீங்கள் கடைபிடித்தால் நிச்சயம் நீங்கள் விரும்பிய துறையில் எளிதில் வேலை வாய்ப்பை பெற முடியும் .
1. நீங்கள் படித்த துறையில் மட்டும் வேலை வாய்ப்பை பெற முயற்சி செய்யுங்கள். தற்காலிக வருமானத்தை மனதில் கொண்டு உங்களது எதிகாலத்திற்கு உதவாத வேலை வாய்ப்புகளை உதறி விடுங்கள். நீங்கள் எடுக்கும் சிறிய முடிவு கூட உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்யும். www.kalvikalanjiam.com
2. கிராமப்புறங்களில் அல்லது வேலை வாய்ப்பு குறைவாக உள்ள பகுதிகளில் உள்ளவர்கள் வேலை வாய்ப்பு அதிகமாக உள்ள நகர் பகுதிகளுக்கு வருவது சிறந்தது. நண்பர்களுடன் சேர்ந்து இடம் மற்றும் உணவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
3. வேலை சம்பந்தமான Naukri, monster, timesjobs போன்ற பல இணையதளங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அடிக்கடி இந்த இணைய தளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கவும் வேண்டும். அப்போதுதான் நீங்கள் வேலை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவல் நிறுவனங்களுக்கு தெரிய வரும். Linked In என்ற இணையதளத்தில் பதிவு செய்து உங்களுடைய துறையில் வேலை வாய்ப்பிற்கு உதவும் நண்பர்கள் மற்றும் பல நிறுவனங்களின் HR ஆகியோரை நண்பர்களாக்கி கொள்ளுங்கள். Linked In இணையதளம் வேலை வாய்ப்பிற்கு உதவும் ஒரு சிறந்த இணையதளமாக உள்ளது.
4. வேலை வாய்ப்பை பெற்று தரும் அல்லது வேலை வாய்ப்பிற்கு உதவும் பல்வேறு Consultancy என்று சொல்லப்படும் நிறுவனங்களை தொடர்பு கொண்டு வேலை பெற முயற்சி செய்யுங்கள்.இன்றைய சூழ்நிலையில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இது போன்ற Consultancy மூலமாகவே வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் வேலை கிடைப்பதற்கு முன்னே பணம் செலுத்துவதை தவிர்த்திடுங்கள். வேலை கிடைத்ததும் பணம் தருவதாக கூறுங்கள். ஏமாற்றும் நிறுவனங்களிடம் உஷாராக இருங்கள் (ஏமாற்றும் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இணையதளத்தில் அந்த நிறுவனத்தை பற்றிய விசயங்களை ஆராயுங்கள். consumercomplaints.in போன்ற இணையதளங்களில் பலரது கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்).
5. நாளிதழ்களில் வெளியாகும் வேலை வாய்ப்பு சம்பந்தமான விவரங்களை தவற விடாதீர்கள். The Hindu போன்ற நாளிதழ்களில் வேலை வாய்ப்பு செய்திகளுக்கென்றே தனியாக பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
6. உங்கள் துறையில் பணி புரியும் உங்கள் கல்லூரிகளில் பயின்ற சீனியர் மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் உதவி கேட்கலாம். நேரம் கிடைத்தால் அவர்களை நேரில் சந்தித்து உங்களுடைய Resume ஐ கொடுத்து விடுங்கள்.
7. உங்களுடைய துறையில் அதிக பயிற்சி பெற அல்லது நீங்கள் பின்தங்கியுள்ள கம்ப்யூட்டர் பயிற்சி (Software Courses), பேச்சு திறன் பயிற்சி (Communication Training) போன்ற பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு தயங்காதீர்கள். சிறந்த வேலை வாய்ப்பிற்கு வழி செய்யும் பயிற்சி நிறுவனங்களை பலரிடம் விசாரித்து தேர்ந்தெடுங்கள். கல்விக்காக நீங்கள் செய்யும் செலவு ஒரு போதும் வீணாகாது. (கல்வி களஞ்சியம் வழிகாட்டி குழுவை தொடர்பு கொள்ளலாம்)
8. இறுதியாக, நேரத்தை வீணாக்காதீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து படத்திற்கு செல்வது, காதல் மற்றும் பல தீய செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றால் உங்கள் நேரம் அதிகமாக வீணடிக்க படுவதோடு உங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும்.
இந்த வழிமுறைகளை பின்பற்றுவதால் நீங்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்று உங்கள் எதிகாலம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம். மேலும் உங்களுடைய ஆலோசனைகளையும் கமெண்ட் இல் தெரிவித்து வேலை தேடும் பலருக்கு உதவுங்கள்.