Wednesday 26 October 2011

எலும்புகளை வலுவடையச் செய்யும் பீர்


வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பீர் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போவெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத்தனால் எலும்புக்கு ஆரோக்கியமளிப்பதும், அதில் உள்ள சிலிகான் புதிய எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு: மதுபானத்தை மருந்தாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், பீரில் உள்ள சத்துகள் எலும்புக்கு வலு சேர்ப்பது உறுதியாகி உள்ளது. குறிப்பாக வயதான காலத்தில் பெண்களை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பீர் பாதுகாக்கிறதாம்.
பீரில் உள்ள எத்தனால் மற்றும் சிலிகான் பெரும்பாலான தாவர பயிர்களிலும் காணப்படுவதாகும். குறிப்பாக அவரை, மொச்சை உள்ளிட்ட தானியங்களில் அதிக அளவில் இந்த சத்து உள்ளது. இது எலும்பு தேய்மானத்தை தடுப்பதுடன் புதிய எலும்புகள் ஆரோக்கியமாக வளரவும் உதவும். பெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியில் சிலிகான் கலப்பு இருக்கும்.
ஈஸ்ட்ரோஜன் அளவு மாதவிடாய் காலங்களில் பாதிப்படையும். அந்த நேரத்தில் மாத்திரை, மருந்துகள் வாயிலாக இந்த சுரப்பியின் குறைபாட்டை ஈடுசெய்வது மிகமிக அவசியம். கவனிக்காமல் விடும் பட்சத்தில் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இத்தகைய சமயங்களில் பீரை தினமும் சிறிதளவு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உணவுகளில் இருந்து கிடைக்கும் சிலிகான் அளவைவிட பன்மடங்கு அதிகமாக பீரில் இருந்து கிடைப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பெண்களுக்கு தினமும் 8 மில்லிகிராம் அளவு சிலிகான் அவசியமாகிறது. இந்த தேவை குறைந்த அளவு பீரில் இருந்து எளிதாக கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். அவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் என்ற அளவில் பீர் அருந்துவது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.