* ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான் என்ற கால அளவு மாறப் போவதில்லை. அதனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
*உங்களுடைய பயனுள்ள நேரம் எங்கு வீணாக செலவிடப்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக சிலர் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவார்கள் அல்லது இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பார்கள் அல்லது டிவி பார்ப்பதில் நேரத்தை செலவிடுவார்கள். இவற்றில் எவ்வகையில் உங்களுடைய நேரம் வீணாகசெலவிடப்படுகிறது என்பதை அறிந்து தவிர்த்து விடுங்கள்.
*நீங்கள் சரியான கால அளவை பின்பற்றுவதை, இலக்காக வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களது நடத்தையில் மாற்றம் ஏற்படும். உதாரணமாக, நான் காலை 10 மணிக்கு இந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என உங்களது நேரத்தை வகுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டம் மட்டும் போடாமல், அதை செயல்படுத்த முனையுங்கள்.
*தினமும் எழும் நேரம் மற்றும் உறங்கும் நேரம் உள்ளிடவற்றை சரியான முறையில் வகைப்படுத்தி கொள்ளுங்கள்.
*மற்றர்வர்கள் கிண்டல் செய்வார்களோ என அஞ்சி, உங்களது கால அளவை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களது வேலையை சரியான நேரத்தில் வழக்கம் போலவே செய்யுங்கள்.
*உங்கள் வேலையே மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும், தேவைற்றை வேலைகள் (distraction – கவனம் திசை மாறாமல்) செய்யாமல் இருக்க வேண்டும்.
*உங்கள் வாழ்க்கை சீரமைத்து கொள்ளவது மிகவும் அவசியம். நம் எந்த பாதையில் இருக்கின்றோம், எதை நோக்கி செல்கிறோம் போன்ற விஷயங்கள் மனதில் வைத்து செயல் பட வேண்டும்
*நல்ல முடிவுகளை திறம்பட கால சூழ்நிலைகளை கருதி எடுக்க வேண்டும்.
எழுச்சியூட்டும் குறிக்கோள்களை அமைத்து, அதை நம் வாழ்நாளில் அடைய பாடுபட வேண்டும்.
*உங்கள் வேலையும் – வாழ்கையும் சமமாக பார்க்க வேண்டும். முழு நேரம் வேலைக்காக செலவு செய்வதன் மூலம் பலன் ஏதும் இல்லை.
*உங்கள் வேலையை ஒரு பழக்கமாக உருவாக்க வேண்டும்.
*உங்கள் வேலை பளுவை நிரவகிக்க கற்று கொள்ள வேண்டும்.
*உங்களின் நேரத்தையும் அதன் மதிப்பையும் போற்ற வேண்டும்.
*இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்.