Friday 14 October 2011

விடுதியில் தங்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும்!!

 
பெரும்பாலும் தங்களின் மேல் படிப்புக்கு, மாணவர்கள் விடுதியில் தங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. மாணவர்கள் தங்களின் பெற்றோர்களின் அரவணைப்பில் பள்ளிப் படிப்பு வரை படித்து, மேல் படிப்புக்கு விடுதி வாழ்கையை எதிர்கொள்ள அவர்கள் மனதளவில் தயாராக வேண்டும்!
ஆரம்பத்தில் விடுதி வாழ்கை அவர்களுக்கு ஓர் முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்! இதனால் அவர்கள் மனநிலை மற்றும் உணர்வுப்பூர்வமாக பாதிக்க படுவார்கள். – Home Sick
இன்னிலையில் அவர்களின் மன தைரியம், இம்மாதிரியான சூழ்நிலையில் பெருதும் கைக்கொடுக்கும். மாணவர்களான நீங்கள் ஹாஸ்டல் வாழ்கையை பழகிக் கொண்டால் மிகவும் போற்றத்தக்கதாக இருக்க கூடும். இந்த அனுபவம் உங்களுக்கு பாட அறிவு மட்டுமில்லாமல் உங்களுக்கு Practical Knowledgeம் – நடைமுறை எதார்த்தங்களை அளிக்கும்!!
மிகவும் நல்ல நண்பர்களை தேர்ந்தேடுப்பது உங்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய அம்சம் ஆகும். சரியான பாதையில் பயணிக்கும் உங்கள் நண்பர், உங்களுக்கு மிகபெரிய சொத்தாகும்! Hostelலில் மற்ற நண்பர்களுடன் நீங்கள் பழகலாம் ஆனால்! தீய நண்பர்களுடன் நெருங்கி பழகாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
நல்ல நண்பர்கள் மட்டுமே உங்களின் தனிமையை போக்க முடியும். அவர்கள் நிச்சயமாக உங்களுக்கு உறுதுணையாகவும், உங்களின் எல்லா சுக துக்கங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்!
நல்ல நண்பர்கள் மற்றும் தன்னை திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம், இவை இரண்டும் உங்களின் விடுதி வாழ்கையை மறக்க முடியாததாக நிச்சயமாக மாற்றும்!
NRI யாக வாழும் அதிக மக்கள் தங்களின் குழந்தைகளை விடுதியில் தான் படிக்க வைக்கிறார்கள்! அந்த வகை பெற்றோர்கள் தங்களின் குழந்தையின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்!! நல்ல நண்பரின் அவசியமும் அவற்றால் ஏற்படும் நன்மைகளும் அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.