Sunday 23 October 2011

BIOS பற்றிய சில தகவல்கள்


கணணியின் அடிப்படை உள்ளீடு/வெளியீடு கட்டமைப்பினையே BIOS (basic input/output system) என்கிறோம்.
இந்த கட்டமைப்பினைக் கொண்டுள்ள மென்பொருள் புரோகிராம், கணணி ஒன்று இயங்கத் தொடங்குகையில், அதில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள்(ஹார்ட்வேர், சவுண்ட்கார்ட், கீ போர்ட், மவுஸ் போன்றவை) அனைத்தும் சரியாக உள்ளனவா என்று சோதனை செய்து ஓபரேட்டிங் சிஸ்டத்தினை இயக்க அனுமதிக்கிறது.
இந்த வன்பொருள் சாதனங்களுக்கான சோதனையை POST– poweron selftest என அழைக்கிறோம். இந்த சோதனை முடிவு சரியாக இருந்தால் தான் இந்த சாப்ட்வேர் புரோகிராம், கணணி கட்டுப்பாட்டினை ஓபரேட்டிங் சிஸ்டத்திடம் ஒப்படைக்கும்.
ஒவ்வொரு பெர்சனல் கணணியிலும் ஒரு பயாஸ் சிஸ்டம் இருக்கும். சில வேளைகளில் இந்த சிஸ்டத்தினையும் நாம் திறந்து பார்த்து அதில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
இந்த பயாஸ் உள்ளாக ஒரு கடவுச்சொல்லை செட் செய்திடலாம். வன்பொருள் சாதன நிர்வாகத்தினை அமைத்திடலாம், கணணியை எந்த சாதனங்கள் வழியாக பூட் செய்யப்பட வேண்டும் என்பதனை நிர்ணயம் செய்திடலாம்.
பயாஸ் புரோகிராமிற்கான இன்டர்பேஸ் விண்டோவினை எளிதாக நாம் அணுகி அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
ஆனால் மிக எச்சரிக்கையுடன் மட்டுமே பயாஸ் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எனவே மாற்றங்களை ஏற்படுத்துகையில், அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியவில்லை என்றால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாது.
பயாஸ் அமைப்பில் நுழைந்திட என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கு காணலாம். கணணி இயக்கத் தொடங்கியவுடனேயே பயாஸ் தன் சோதனையை மேற்கொண்டு விண்டோஸ் சிஸ்டத்திடம் பொறுப்பை ஒப்படைக்க சில விநாடிகள் தான் எடுத்துக் கொள்ளும்.
எனவே பயாஸ் அமைப்புக்குள் நுழைய விரும்பினால் விரைவாக அதனை நிறுத்தி நுழைய வேண்டும். இதற்கு கணணி இயங்கத் தொடங்கியவுடன் முதல் திரை காட்டப்படும்.
அதில் எந்த கீயை அழுத்தினால் பயாஸ் அமைப்பிற்குள் நுழையலாம் என்று காட்டப்படும். அது F1, F2, or F3 ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கலாம். Esc அல்லது Delete அல்லது கீயாக இருக்கலாம்.
சில கணணிகளில் இந்த கீகளுடன் இன்னொரு கீயினைச் சேர்த்து அழுத்த வேண்டியதிருக்கலாம். எனவே முதலில் காட்டப்படும் பக்க செய்தியைக் கவனமாகக் காணவும். அந்த செய்திகள் கீழ்க்குறிப்பிட்டவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.
‘Press F1 to enter setup’
‘BIOS settings: Esc’
‘Setup = Del’
‘System configuration: F2'
இதனை முதல் முயற்சியிலேயே பார்க்க இயலாவிட்டால் மீண்டும் கணணியை பூட் செய்து காணவும். பயாஸ் அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன் ஏற்கனவே உள்ள செட்டிங்ஸ் குறித்து ஒரு தாளில் குறித்துக் கொள்ளவும் அல்லது பயாஸ் விண்டோவின் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை எடுத்துவைத்துக் கொள்ளவும். அதன் பின் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.
பொதுவாக கணணி எந்த சாதனங்கள் வழியாக பூட் செய்வது என்று அமைப்பதுதான் இதில் பலரும் மேற்கொள்ளும் வேலையாக இருக்கும். ஓபரேட்டிங் சிஸ்டம் ஹார்ட் டிஸ்க்கில் அமைக்கப்படுவதால் முதலில் ஹார்ட் டிஸ்க் வழியாகப் பூட் செய்திடும்படி அமைப்போம்.
இதில் பிரச்னை ஏற்பட்டால் சீடியில் ஓபரேட்டிங் சிஸ்டத்தினை வைத்துக் கொண்டு, முதலில் சீடி வழியாக ஓபரேட்டிங் சிஸ்டத்தினைத் தேடும் வகையில் அமைக்கலாம். எந்த மாற்றங்களை ஏற்படுத்தினாலும் பயாஸ் விண்டோவினை விட்டு வெளியேறுகையில் மாற்றங்களை சேவ் செய்திட வேண்டும்.
இதற்கெனக் காட்டப்படும் மெசேஜ் விண்டோவினைப் பார்த்துச் சரியான கீகளை அழுத்தி சேவ் செய்திட வேண்டும். சேவ் செய்த பின்னர் இந்த மாற்றங்களை இயக்க மீண்டும் ஒரு முறை கணணியை பூட் செய்திட வேண்டும்.