Friday, 21 October 2011

தங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா? அப்ப லவ் மேரேஜ் தான் கரெக்ட்!


சூரியன் FM இல் மகளிர் மட்டும்னு பெண்கள் மட்டுமே பங்கு பெறும் நிகழ்ச்சி மதிய நேரத்தில் போடுவாங்க. அந்த நிகழ்ச்சியில் தினமும் ஏதாவது பிரச்னையை கேள்வியா பெண்கள்கிட்ட கேட்பாங்க. பெண்களும்  போன் பண்ணி அவங்களோட கருத்துக்களை சொல்வாங்க. நேத்து என்ன  பிரச்னையை எடுதுக்கிட்டாங்கனா, தங்கம் விலை இப்படி நெனச்சு பாக்க முடியாத அளவுக்கு ஏறிட்டே போகுதே? அதனால என்னென்ன விளைவுகள் வருதுன்னு டாபிக் எடுத்திருந்தாங்க, நிகழ்ச்சியில பேசியவங்க கல்யாண  சீர்வரிசை  மற்றும்  செய்முறை  செய்றதும்  பிரச்சனையா இருக்கு. அதுவுமில்லாம தங்கத்தில் முதலீடு செய்யலாம்னு நெனச்சாலும் அதன் விலையை பார்த்து மலைக்க வேண்டியதா இருக்கேன்னு பேச்சு ஓடிட்டு இருந்துச்சு.

         ஒவோருத்தரா போன் பண்ணி ஒவ்வொரு யோசனையா சொல்லிட்டு இருந்தாங்க.  ஆனா ஒரு பெண் சொன்னாங்க தங்கம் விலையெல்லாம் ஏறிப்போச்சு. அதனால சீர்வரிசை நிறைய,  இல்லை கொஞ்சம் கொடுக்கிறது கூட கஷ்டம் தான், அதை தவிர்க்கனும்னா லவ் மேரேஜ் பண்ணிகிட்டாங்கன்னா அந்த பிரச்சனையே இல்லைன்னு சொன்னாங்க. ஆகா ஒரு பெண்ணிடமிருந்து இப்படி ஒரு கருத்தான்னு நிகழ்ச்சி தொகுப்பாளர் அசந்து போயிட்டாங்க. மறுபடியும் அவங்க சொன்னாங்க, இன்னைக்கு நிலைமையில ஒரு பொண்ணுக்கு பையனையோ, அல்லது பையனுக்கு ஒரு பொண்ணை பார்க்றதும் சிரமமான விசயமா இருக்கு. வரன் அமைந்தாலும் பொருத்தம் அமையறது இல்லை. அப்படியும் அமைஞ்சா ஏதாவது காரணம் சொல்லி தட்டிப் போயிருது. ஆக வரன் தேடுறதும் கஷ்டமான விஷயமாத்தான் இருக்கு.
         அப்படியே கஷ்டப்பட்டு தேடி ஒரு வரன் கிடைச்சாலும் மண்டபத்தில் இருந்து சாப்பாடு, அழைப்பிதழ், பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் நகைகள் போட்டு, அப்பப்பா ஏகப்பட்ட பார்மாலிடிஸ் இருக்கு. அப்படியே செலவு செஞ்சு திருமணம் நடத்தினாலும் அதுல, இதுல என ஏகப்பட்ட குறை சொல்வாங்க... இப்படி எந்த இம்சையிலும் சிக்காம இருக்கணும்னா, தங்கம் விலையிலிருந்தும் தப்பிக்கனும்னா லவ் மேரேஜ் தான் கரெக்ட்னு அவங்க ஒரு விளக்கமே சொன்னாங்க.
      ஹி... ஹி... தங்கம் விலையேற்றத்தை பார்த்தா ஒரு வகையில லவ் மேரேஜ்ம் ஓகே தான்னு நினைக்கத் தோணுது....