இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வதாக தேசிய புலனாய்வு கணக்கெடுப்பு கூறியுள்ளது.
விவசாயிகள் தற்கொலை செய்வதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளதாக தேசிய புலனாய்வு கணக்கெடுப்பு சான்றிதழ் பீரோ அமைப்பின் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான 16 ஆண்டு கால கட்டத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 1995-2002 ஆம் ஆண்டு கால இடைவெளியில் இவற்றின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 66 ஆக இருந்தது அடுத்த எட்டு ஆண்டுகளில் 30 ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது.
விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்டிரா முன்னிலை வகிக்கிறது. அதனையடுத்து ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் இடம்பெறுகி்ன்றன.
ஆண்டிற்கு 74 ஆயிரத்து 027 என்ற அளவில் தனிநபர் வருமானம் பெறுவதில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்து காணப்படுகிறது. இங்கு ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 1155 ஆக உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது.