Monday 17 October 2011

திருமணமான ஆண்களை இளம் பெண்கள் விரும்புவது ஏன்?

ளம் பெண்களுக்கு திருமணம் ஆன ஆண் மீது அதிக ஈர்ப்பு ஏற்படுவதாக சொல்லப்படுவது உண்டு. இது ஏன்?
மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருமணமான ஆண் தன்னை கவர என்ன காரணம் என்பதை விளக்குகிறார்.
நான் பணிக்கு செல்லும் பெண். இப்போது திருமணம் செய்து கொள்ளும் நிலையில் நான் இல்லை. எனவே திருமணமான ஆண் என் விருப்பத்துக்கு சரியான தேர்வு என நினைக்கிறேன். ஏனெனில் அவர் என்னிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளமாட்டார். அவரிடம் பல விஷயங்கள் பிடித்துப் போனாலும் எனக்கு அவர் கிடைக்க மாட்டார் என்பது தெரியும். எனவே அவரிடம் என்னை ஒப்படைக்க வேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது.
என் அழகைப் பார்த்து தொடர்பு கொள்ளும், பழகும் ஆண் நண்பர்களை எனக்கு பிடிப்பதில்லை. நான் திருமணமான அந்த ஆண் நண்பரை பார்த்ததுமே விரும்பத் தொடங்கவில்லை. ஆனால் அவர் என் விருப்பங்களை அறிந்தவராகவும், எனக்காக நான் விரும்புவதை தரத் தொடங்கியதையும் அறிந்தபோது நான் அவரை விரும்பி விட்டேன். நான் அவரது வலையில் விழுந்து விடவோ, என்னை இழந்து விடவோ நினைப்பதில்லை. அவர் அவரது மனைவியைவிட என்னை அதிகம் விரும்புகிறார். எனவே அவரை என்னால் குறைகூற முடியாதுஎன்கிறார்.
இந்த மாதிரியான மனநிலை கொண்ட பெண்களைப் பற்றி டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள்.
ஒரு பெண் திருமணமான ஆணால் கவரப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. பெரும்பாலும் அவர் பாதுகாப்பானவர் என்பது முக்கியமான காரணம். ஒரு பெண் எவ்வளவு விரும்புகிறாரோ அந்த அளவுக்கு ரகசியம் பாதுகாப்பவராக திருமணமான ஆண் இருக்கிறார். இன்னும் சில பெண்கள், திருமணமானவர் எல்லை மீறுவதை உணர்வு ரீதியான ஊக்கமருந்தாக நினைக்கிறார்கள்.
திருமணமான ஆண்கள் எப்போதும் இந்த மாதிரியான பெண்களை காதலுடன் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. இதுவும் கூட பல பெண்களை கவர்ந்து விடுகிறது. தனிமையில் வாழும் அதிக வயதுடைய பெண்கள் பலர் இதுபோன்ற திருமணமான ஆண்களின் உறவை விரும்புகிறார்கள். அவர்கள் திருமணமான ஆண்களைப் பார்த்ததும் அதிகமாக விரும்பத் தொடங்கி விடுகிறார்கள். அவர்களுக்கே எப்படிப் போகிறோம், இது எங்கே போய் முடியும் என்பது தெரிந்தாலும் அவர்களால் இந்த ஈர்ப்பிலிருந்து வெளிவர முடிவதில்லைஎன்கிறார் மும்பையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் கெர்சி பி.சாவ்டா.
டாக்டர் அஞ்சலி சாப்ரியா, “பெண்கள் உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பை விரும்புவதால் தான் திருமணமான ஆண்களை விரும்புகிறார்கள்என்கிறார். இதுபற்றி அவர் கூறுகிறார் தனிமையில் இருக்கும் பெண்கள்தான் அதிகஅளவில் திருமணம் ஆன ஆண்களை விரும்புகிறார்கள். திருமணமானஆண்கள் பெண்களின் உணர்வை புரிந்தவர்களாகவும், அதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். பொருளாதார ரீதியிலும் `செட்டில் ஆக வேண்டும் என்ற உணர்வுடையவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த இரண்டையுமே பெண்கள் விரும்புவார்கள். எனவே திருமணமான ஆண்களை பெண்களுக்கு எளிதில் பிடித்துப்போகிறது.
திருமணமாகாத வாலிபனை இந்த விஷயங்களில்தான் திருமணமானவர் மிஞ்சிவிடுகிறார். மேலும் அவர் எல்லா விஷயங்களிலும் பெண்ணின் விருப்பங்களை தொடர்ந்து வருபவராக இருக்கிறார். இதுவும் பெண்களை மிகவும் கவர்ந்து விடுகிறது. சில பெண்கள், தங்களை விரும்பும் ஆண் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து கவனித்துக் கொள்வதை எதிர்பார்க்கிறார்கள். தங்களின் சுதந்திரத்தையும், தனி மதிப்பையும் அவர்கள் விரும்புகிறார்கள்.
இந்த எதிர்பார்ப்பு திருமணம் ஆன ஆண்களிடம் நிறைவேறுவதுபோல் தெரிவதால் பெண்கள் அவர்களை அதிகமாக விரும்புகிறார்கள்என்றார்.
எப்படி இருந்தாலும் திருமணமான ஆண்களை, திருமணம் ஆன பெண்ணோ, திருமணம் ஆகாத பெண்ணோ விரும்புவது சரியில்லை. எப்போதுமே அது ஆபத்தானது.