Wednesday, 12 October 2011

ராணுவ உடையை அவமதித்தார் நடிகர் மோகன்லால்

மோகன்லாலை கவுரவிப்பதற்காக ராணுவத்தில் லெப்டினட் சலோனல் பதவி வழங்கப்பட்டது.
இதற்காக அவருக்கு ராணுவ சீருடையும் அளித்தனர், அந்த சீருடையில் ராணுவத்தினர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதற்கிடையில் கேரள அரசு சுற்றுலாத்துறையின் விளம்பர படமொன்றில் மோகன்லால் ராணுவ சீருடை அணிந்து நடிக்கிறாரர்.
அந்த விளம்பர படம் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டது, ராணுவம் வழங்கிய சீருடையை விளம்பர படத்தில் நடிக்க பயன்படுத்தி அவமதித்து விட்டதாக மோகன்லால் மீது ராணுவ தலைமையகத்தில் புகார் செய்யப்பட்டது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது, இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இளைஞர்களை ராணுவப் பணிக்கு ஈர்ப்பதற்காக பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு கவுரவ லெப்டினட் பதவி வழங்கப்படுகிறது.
கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், டோனி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா போன்றோருக்கு இப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு ராணுவ சீருடையும் அளிக்கப்பட்டது ராணுவ நிகழ்ச்சிகளில் மட்டுமே அந்த சீருடையை அணிய வேண்டும் என்று ராணுவ உயர் அதிகாரி கூறினார்.
மோகன்லால் விளம்பர படத்தில் நடிக்க அதை பயன்படுத்தியதாக வந்துள்ள புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறினார்.