மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8ன் முதல் சோதனை பதிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதனை பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.
விண்டோஸ் 8 ஆனது பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
1. பயனர் இடைமுகம்(User Interface): இந்த இயங்குதளத்தில் பிரபலமான WP7 Metro பயனர் இடைமுடம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இதில் மற்றொரு முக்கிய விஷயம் இதில் ஸ்டார்ட் மெனுவிற்கு பதிலாக ஸ்டார்ட் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரை முழுவதும் குறுக்கு விசை ஐகான்களால் நிறைந்திருக்கும், நீங்கள் அதில் உள்ள ஐகான்களை நீக்கவோ சேர்க்கவோ மேலும் அவற்றின் அளவை மாற்றவோ முடியும்.
மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பயனர் இடைமுகத்தினால் இது மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்த எளிமையாய் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் இந்த பயனர் இடைமுகம் தொடுதிரை சாதனங்களில் இயங்குவதற்கு மிகவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. தேடல் வசதி(Search): மேலும் இந்த இயங்குதளத்தில் கோப்புகளை தேடும் வசதி மிகவும் விரைவாக இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது, விண்டோஸின் முந்தைய பதிப்புகளை போல அல்லாமல் இந்த தேடுதல் முறையில் நீங்கள் ஒரு கோப்பின் பெயர் மட்டுமல்லாமல் அதன் உள்ளே உள்ள ஏதேனும் ஒரு விஷயத்தை கொடுத்தும் தேடலை மேற்கொள்ளலாம். அதாவது ஒரு Ms-Word கோப்பின் உள்ளே சேமிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு வார்த்தையை தேடினால் கூட இந்த கோப்பு காண்பிக்கப்படும்.
3. குறைவான துவக்க நேரம்(Less Start up time): இதில் கூறப்பட்டுள்ள மற்றொரு வசதியானது அதன் பூட்டிங் நேரம் குறைவானது என்பதுதான் மைக்ரோசாப்ட் 5 விநாடிகளில் ஸ்டார்ட் ஆகி பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என்று அறிவித்திருந்தது, ஆனால் அதைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
விண்டோஸின் முந்தைய பதிப்புகளை விட இந்த துவக்க நேரம் குறைவானதுதான், மேலும் விண்டோஸ் 7ல் இயங்கிய அனைத்து மென்பொருட்களும் அதைவிட வேகமாக விண்டோஸ் 8ல் இயங்குவதாக கூறுகின்றனர்.
4. மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ப்ளோரர்(windows explorer): இதில் உள்ள மிக மிக முக்கியமான விஷயம் இதில் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007ல் பயன்படுத்தப்பட்டுள்ளதை போன்ற ரிப்பன் மெனு பட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரிப்பன் மெனுவானது நீங்கள் செலக்ட் செய்துள்ள கோப்பின் வகையை பொறுத்து தானாக மாறிக்கொள்கிறது, நீங்கள் mp3 கோப்பை செலக்ட் செய்தால் ப்ளே வித் ஆப்ஷனும் மற்ற ஆப்ஷன்களும், நீங்கள் ZIP கோப்பை செலக்ட் செய்தால் ஆப்ஷனும் தானாகவே மாறிக்கொள்கிறது.
5. இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10(IE 10): இந்த இயங்குதளத்தில் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10 பதிப்பு இணைக்கப்பட்டுள்ளது, இதில் CSS3 மற்றும் HTML5னை இயக்கும் திறன் உள்ளது, எனவே ஃப்ளாஷ் இல்லாமலேயே வீடியோக்களை பார்த்தல் மற்றும் பல வேலைகளை செய்யலாம்.
6. மார்க்கெட் ஸ்டோர்(Market): விண்டோஸ் 8 பதிப்பின் வெளியீட்டுடன் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மென்பொருட்களுக்கு உள்ளதைப் போன்ற மார்க்கெட் ஸ்டோர் ஒன்றினை அறிமுகப்படுத்தும் திட்டமும் மைக்ரோசாப்டிடம் உள்ளதாம், இது இன்னும் முழுமையாக முடிவடையாததால் இப்போது இந்த சோதனை பதிப்பில் இணைக்கப்படவில்லை.
7. லைவ் சின்க்ரோனைஷேசன்(Live sync): இதில் உள்ள மேலும் ஒரு முக்கிய வசதி நமது தகவல்களை நேரடியாக சின்க்ரனைஸ்(Synchronise) செய்ய இயலும், உங்களின் விண்டோஸ் லைவ் ஐடியை பயன்படுத்தி நீங்கள் உள்நுழைந்தால் உங்கள் கோப்புகள், அமைவுகள் அனைத்தும் சின்க் செய்யப்பட்டு விடும்.
பின்னர் நீங்கள் எந்த கணணியிலும் உங்கள் ஐடியினை பயன்படுத்தி அந்த கோப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் மைக்ரோசாப்டானது கூகுள் க்ரோம் இயங்குதளத்தின் போட்டியை சமாளிக்க ஒரு அடி எடுத்து வைத்துவிட்டது.