Tuesday 4 October 2011

அதிகம் சிகரெட் பிடிப்பவர்களுக்கு பக்கவாத நோய் ஏற்படும்: மருத்துவர்கள் தகவல்



சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் 3 மடங்கு அதிகம் தாக்கும். சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதனால் புற்றுநோய், காசநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் சிகரெட் பிடிப்பதால் பக்கவாத நோய் ஏற்படும். அதுவும் மற்றவர்களை விட சிகரெட் புகைப்பவர்களுக்கு 3 மடங்கு கூடுதலாக ஏற்படும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கனடாவில் உள்ள ஓட்டோவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் 950 பக்கவாத நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களில் 700 பேர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் 250 பேர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
சிகரெட் பிடிப்பதால் உடலில் உள்ள ரத்த நாளங்களில் ஓடும் ரத்தம் உறைந்து விடுகின்றன. இதனால் அவர்களுக்கு மற்றவர்களை விட பக்கவாத நோயின் பாதிப்பு 3 மடங்கு கூடுதலாக இருக்கும் என கணித்துள்ளனர்.
மேலும் சிகரெட் புகைப்பவர்களுக்கு 58 வயதிலும், சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு 67 வயதிலும் பக்கவாத நோய் ஏற்படுகிறது
 என்றும் கண்டறிந்துள்ளனர்.