Thursday 6 October 2011

உங்களது கூகுள் பிளஸ் கணக்கை டெலிட் செய்வதற்கு



கூகிள் நீண்ட காலமாக சமூக வலைத்தளங்களில் தனது முத்திரையை பதிக்க முயன்று வருகிறது.
இதன் எளிய பிரைவசி செட்டிங்க்ஸ், சர்க்கிள், ஹேங்க் அவுட் போன்ற சிறந்த அம்சங்கள் வல்லுனர்களால் பெரிதாக பேசப்பட்டாலும் தற்போதுள்ள நிலையில் பேஸ்புக்கை வெல்ல முடியவில்லை என்பதைவிட தொடவும் முடியவில்லை என்பதே உண்மை.
ஆரம்பத்தில் யாரேனும் கூகுள் பிளஸில் இணைந்து கொள்ள அழைப்பு கொடுத்தால் மட்டுமே இணைய முடியும் என்றிருந்தது. இப்போது அனைவருக்கும் கூகுள் பிளஸின் வாசல் திறந்திருக்கிறது.
நீங்கள் கூகிள் பிளஸை கணக்கை அழிக்க விரும்புகிறீர்களா. பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள். பயப்பட வேண்டாம், இதனால் உங்கள் ஜிமெயில் கணக்கு எதுவும் பாதிக்கப்படாது.
ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். கூகுள் அக்கவுண்ட் என்பதை தேர்வு செய்து பிரைவசி செட்டிங்க்ஸை தேர்ந்தெடுக்கவும்.
இப்போது இடது புறத்தில் அக்கவுண்ட் ஓவர் வியூ தேர்வு செய்தபின் வலது புறத்தில் சர்விஸஸ் பகுதியை பாருங்கள்.
இதில் நீங்கள் கூகுள் பிளஸ் கணக்கை முடிக்க Delete profile and social features என்பதையும், அனைத்து கூகுள் வசதிகளையும் முடிக்க Delete account என்பதையும் தேர்வு செய்யவும்.
இப்போது நீங்கள் Delete profile and social features என்பதை தேர்வு செய்திருந்தால் Delete Google+ Content ஐ தேர்ந்தெடுத்தபின் Remove Selected Services என்பதை அழுத்தவும்.