கணணியை பயன்படுத்திக் கொண்டிருக்கையில் சில வேளைகளில் அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்ல வேண்டியதிருக்கும்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் கணணி அதிக நேரம் பயன்படுத்தப்படப்போவதில்லை என்று எண்ணினால் அது பயன்படுத்தும் மின்சக்தியைப் பெரும் அளவில் குறைத்து மின்சக்தி வீணாவதனைத் தடுக்கலாம்.
நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி எனில் ஸ்லீப் மோட்(Sleep mode/Standby) என்ற வகையில் அதனை அமைக்கலாம். இன்னும் கூடுதலாக மின்சக்தியை மிச்சப்படுத்த ஹைபர்னேஷன்(hibernation) என்னும் நிலைக்கு மாற்றலாம்.
இந்த இரண்டு நிலையிலும் மின்சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. மேலும் திரும்ப பணியாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து இயக்க முற்படுகையில் எங்கு எந்த புரோகிராம்களைத் திறந்திருந்தோமோ அந்த நிலையிலும் எந்த கோப்பில் எங்கு பணியாற்றிக் கொண்டிருந்தோமோ அந்த இடத்திலும் நமக்குக் கணணி இயக்கப்பட்டுக் காட்டப்படுகிறது.
Sleep mode நிலையில் மின்சக்தி மிச்சப்படுத்தப்பட்டாலும் உங்கள் கணணி இயக்க நிலையில் உள்ளது. விண்டோஸ் சிஸ்டம் அப்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் ராம் மெமரியில் இருக்கும் அப்போது திறந்து வைக்கப்பட்டுப் பணியில் இருக்கும் கோப்புகள் ஆகியவற்றை உயிர்த்துடிப்புடன் வைத்திட மின்சக்தி தேவைப்படுகிறது.
ஆனால் ஒரு பெர்சனல் கணணி hibernation நிலையில் வைக்கப்படுகையில் சிஸ்டமானது ராம் நினைவகத்தில் உள்ள அனைத்தையும் ஒரு கோப்பில் கொப்பி செய்து ஹார்ட் ட்ரைவில் வைக்கிறது.
பின்னர் கணணியை முழுவதுமாக ஷெட்டவுண் செய்கிறது. எனவே ஹைபர்னேஷன் நிலை கூடுதலாக மின்சக்தியை சேமிக்கிறது. ஆனால் சற்று மெதுவாக பழைய நிலைக்குத் திரும்புகிறது.
இன்றைய காலத்திய பெர்சனல் கணணி ஸ்லீப் நிலைக்குச் செல்வதும் மீண்டும் இயக்கத்திற்கு வருவதும், சொடக்குப் போடும் நேரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ஹைபர்னேட் ஆவதற்கு ஏறத்தாழ அரை நிமிட நேரமும் மீண்டும் செயல்பாட்டிற்கு அதிலிருந்து வருவதற்கு அரை நிமிட நேரமும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மிக அதிக நேரம் நிறுத்திவைத்திடப் போவதாக இருந்தால் ஹைபர்னேஷன் நிலையிலும் குறைவான நேரமே இயக்காமல் இருக்கப் போவதாக இருந்தால் ஸ்லீப் நிலையிலும் கணணியை வைப்பது நல்லது.
நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால் டெஸ்க்டொப் திரையில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும்.
கிடைக்கும் விண்டோவில் Screen Saver என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Power பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Hibernate டேப்பில் கிளிக் செய்து Enable Hibernation. என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
அடுத்து Apply பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்ததாக Power Schemes டேப்பில் கிளிக் செய்து standby மற்றும் hibernate ஆப்ஷன்களையும் காணலாம்.
நீங்கள் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 பயன்படுத்துபவராக இருந்தால் ஸ்டார்ட் கிளிக் செய்து Power என டைப் செய்திடவும். அடுத்து Power Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இடதுபுறப் பிரிவில் Choose when to turn off the display என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Sleep ஆப்ஷன் இருப்பதனைப் பார்க்கலாம். ஹைபர்னேஷன் பற்றி எதுவும் இருக்காது.
எனவே Change advanced power settings என்பதில் கிளிக் செய்திடவும். “Sleep after” மற்றும் “Hibernate after” ஆகிய ஆப்ஷன்களைப் பெற Sleep பிரிவை விரிக்கவும். இங்கு நீங்கள் விரும்பும் வகையில் செட்டிங்ஸ் ஏற்படுத்தலாம்.
tel.:fax:
your@email.com
http://www.yoursite.com
your@email.com
http://www.yoursite.com