அல்லியம் சடைவம் என்பது இதன் அறிவியல் பெயர். இதை உடைத்தால் சிறுசிறு பற்கள் போன்ற பகுதிகள் வெளிவரும்.
இதை நசுக்கினால் ஒரு வாசம் வரும். இதுதான் மருந்து தயாரிக்க மிகவும் உதவி புரிகிறது. இது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது.
ஜீரணக்கோளாறுகளை பூண்டு நன்றாக குணப்படுத்திவிடும். பூண்டு பற்களை நேராகவோ அல்லது கேப்சூல் மற்றும் மாத்திரைகளாகவோ பயன்படுத்தலாம்.
இதன் எண்ணெயை கேப்சூலாக்கி கார்லிக் பெர்ல் என்ற பெயரில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. குடல் பூச்சிகளை வெளியேற்றுகிறது. மார்பு வலி மற்றும் மூச்சுக்குழல் அழற்சிக்கு சிறந்த மருந்து இது.
சளி, ப்ளூ காய்ச்சல், காது வலிக்கும் பயன்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்க பயன்படுகிறது.