Tuesday, 11 October 2011

பெண்


நீ ஒரு பெண்
இதை நீ ஒருபோதும் மறவாதே
உனது வீட்டின் நிலைப்படியை நீ தாண்டினால்
ஆண்கள் உடனடியாக உன்னைக் கவனிப்பார்

தெருவில் நீ நடக்கத் தொடங்கினால்
ஆண்கள்
உன்னைத் தொடர்ந்து வந்து விசிலடிப்பார்கள்
தெருமுனை தாண்டி
பிரதான சாலையில் நீ அடியெடுத்து வைக்கும்போது
ஆண்கள்
உன்னைக் கேவலமாக பார்பார்கள்
நடத்தை சரியில்லாதவள் என்பார்கள்

உனக்கு ஆளுமை இல்லையென்றால்
நீ திரும்பி பார்ப்பாய்

அப்படியில்லையெனில் நீ
தொடர்ந்து போய்க் கொண்டேயிருப்பாய் இப்போது
போய்க்கொண்டிருப்பதைப் போல....